இலங்கை கடற்படையினரால் 14 சீனர்களின் சடலங்கள் மீட்பு(Photos)
இந்திய மத்திய கடலில் கவிழ்ந்த சீன மீன்பிடிக் கப்பலிருந்து இலங்கைக் கடற்படையினரால்14 சீனர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கைக் கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பணிப்புரையின் கீழ் கடல் கண்காணிப்புக் கப்பலான எஸ்.எல்.என்.எஸ். விஜயபாகு பணிகளில் ஈடுபட்டுள்ளாபோதே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளன.
மீட்கும் முயற்சியை குறைத்த சீனா
கப்பலின் பல்வேறு இடங்களிலிருந்து மேலும் 14 பணியாளர்களின் சடலங்களை இலங்கைக் கடற்படையினர் மீட்டுள்ள நிலையில் விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், கப்பலில் 38 பேர் இருந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கவிழ்ந்த மீன்பிடிக் கப்பலில் இருந்து காணாமல்போன பணியாளர்களை மீட்கும் முயற்சியை சீனா குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக விபத்தில் சிக்கிய எவரையும் உயிர் பிழைக்க வைக்கக்கூடிய குறைந்தளவான சாத்தியம் உள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
