மட்டக்களப்பில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 14 பேர் கைது
மட்டக்களப்பு - வடமுனை பிரதேசத்திலுள்ள வீரான்டவில் பகுதியிலுள்ள ஆற்றில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்ட 14 பேரை இன்று விசேட அதிரடிப்படையினர் கைது செய்ததுடன் 14 உழவு இயந்திரங்களையும் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பகுதியை இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினருடன் மாவட்ட புலனாய்வு பிரிவினர் ஒன்றினைந்து முற்றுகையிட்டனர்.
இதன்போது சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்ததுடன் 11 உழவு இயந்திங்களையும் மீட்டு பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளை மற்றொரு இடத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதுடன் மூன்று உழவு இயந்திரங்களையும் பொலிஸார் மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
