ஈழத்தமிழருக்கு அமெரிக்காவால் ஏமாற்றம்! இறுக்கிப் பிடிக்கும் இந்தியா (VIDEO)
13ற்கான கோரிக்கை கூட இலங்கை அரசாங்கத்தின் ஒரு நிகழ்ச்சி நிரலாக இருக்கூடுமோ என்ற ஒரு சந்தேகம் எழுகின்றது என அரசியல் ஆய்வாளரும், ஊடகவியலாளருமான நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் இந்தியா அதில் அழுத்தம் கொடுக்க வேண்டும் அல்லது இந்தியா அழுத்தம் கொடுத்தது என்று நாங்கள் ஏற்கனவே கூறினாலும், இம்முறை நகர்வை பார்க்கின்ற போது இந்தியா அந்த 13 என்ற விடயத்திலே பாரியளவில் அழுத்தம் கொடுக்கவில்லை.
இது இலங்கை அரசாங்கத்தின் மூலமாக தமிழ் தேசிய கட்சிகள் இணைந்து இந்த நகர்வை கொண்டு வருகின்றார்கள் என்று ஒரு ஊகம் எழுகிறது. அதற்கான நகர்வை காணமுடிகிறது.
இந்நிலையில், தென்னிலைங்கையின் ஒரு தேவைக்காக தமிழ் கட்சிகள் இணங்கி வருகின்றதா என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்தோடு சுமந்திரனின் அமெரிக்க பயணத்திலும் கூட ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. 13வது திருத்தச் சட்டத்திற்கான கடிதத்தோடு பார்ப்பதாக இருந்தால் அனேகமாக இலங்கைக்கு ஒரு தேவை இருக்கின்றது.
தமிழ் மக்களை இந்த ஒற்றை ஆட்சிக்குள் எப்படியாயினும் வாழ வைத்து விட வேண்டும். அதாவது அந்த ஒற்றை ஆட்சியை ஏற்று அந்த கட்டமைப்புக்குள்ளே வாழ்வதற்கான சூழலை உருவாக்கிவிட வேண்டும் என்ற எதிர்பாப்பு இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
அது எந்த சிங்கள ஆட்சி அரசாங்கமாக இருந்தாலும் அவர்கள் இந்த கட்டமைப்புக்குள்ளே வாழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஆகவே அந்த முன்னோடி நடவடிக்கைகளுக்காக தமிழரசு கட்சிதான் அனேகமாக காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் இருக்ககூடிய தமிழரசு கட்சி அல்லாத டெலோ மற்றும் புலோட் போன்ற வேற இயக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவும் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 8 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam