அருணி விஜேவர்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ள இலங்கை - சீனா இராஜதந்திர கூட்டத்தொடர்
சீனாவில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள 13ஆவது இராஜதந்திர ஆலோசனை கூட்டத்திற்கு இலங்கையின் வெளியுறவுச் செயலர் அருணி விஜேவர்தன தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீன மக்கள் குடியரசின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர் சன் வெய்டாங்குடன் ஆலோசனைகளுக்கு அமைய இணைத் தலைவராக செயற்பட்வள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம்
ஆலோசனைக்கான இலங்கையின் தூதுக்குழுவில் இலங்கை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் மஜிந்த ஜெயசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அதிகாரிகள் சிலரும் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் 12வது சுற்று பேச்சுவார்த்தை 2023.05.30ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |