13 ஆவது இந்துக்களின் போர் ஆரம்பம்
இந்துக்களின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பணம் இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 13 ஆவது சமர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாண இந்துக் கல்லூரி அணிக்கு எம்.கஜனும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கு b.தாருஜனும் தலைமை தாங்கினர்.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு இந்துக்கல்லூரியின் தலைவர் துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்ய, யாழ்ப்பாண இந்துக்கல்லூரி துடுப்பெடுத்தாட ஆரம்பித்துள்ளது.
இந்துக்களின் சமர்
ஆரம்ப துடுப்பாட்ட வீர்ரகளாக யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் வலது கை துடுப்பாட்ட வீர்ர்களான p.ஸ்ரீநிதுசன் மற்றும் p.யாதவ் களமிறங்கி துடுப்பெடுத்தாடியுள்ளனர்.
ஆரம்பத்தில் நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கொழும்பு இந்துக்கல்லூரி அணி வீரரான ஸ்ரீவிதுர்சன் 2 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 12 (33) ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சுபர்ணனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
தொடர்ந்து களமிறங்கிய கொழும்பு இந்துக்கல்லூரியின் அணித்தலைவரும் வலதுகை துடுப்பாட்ட வீரருமான b.தாருஜன் களமிறங்கியதுடன் தாருஜன் யாதவ் இணைப்பாட்டம் நிதானமாக ஆடப்பட்டுக்கொண்டிருக்கும்போது மிக நிதானதாக ஆடிய யாதவ் சாருஜனின் பந்துவீச்சில் 45 பந்துகளை எதிர்கொண்டு 2 நான்கு ஓட்டங்களுடன் மொத்தமாக 8 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துள்ளார்.
எஸ்.மிதுசிகன் ஓட்டமெதுவும் பெறாமல் ஹரிகரனின் பந்துவீச்சில் பிரீமிகனிடம் பிடிபொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
அத்துடன் ரி.சந்தோஷ் 26 பந்துகளை எதிர்கொண்டு 3 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஹரிகரனின் பந்துவீச்சில் பிரீமிகனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
தொடர்ந்து ஆடிய கொழும்பு இந்துக்கல்லூரி அணி மதிய இடைவேளையின் பின்னர் 55.1 ஓவரில் 80 ஓட்டங்களுடன் சகல விக்கெற்றுகளையும் இழந்ததுடன் இதில் நிதுசன் அதிகூடிய ஓட்டங்களாக 33 பந்துகளில் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சார்பில் கரிகரன் சுபர்னன் ஆகியோர் தலா மூன்று இலக்குகளை வீழ்த்தியுள்ளனர்.
இதன்போது பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் யாழ்ப்பாண இந்துக்கல்லூரி அணி விக்கெற் இழப்பின்றி 60 ஓட்டங்களை பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |