13வது ஆசிய இளைஞர் வலைப்பந்து செம்பியன்சிப் போட்டி! அரையிறுதி சுற்றில் களமிறங்கவுள்ள இலங்கை
13வது ஆசிய இளைஞர் வலைப்பந்து செம்பியன்சிப்பின் அரையிறுதியில் இலங்கை பெண்கள் அணி இன்று நடப்பு வெற்றியாளர் அணியான மலேசியாவை எதிர்த்தாடுகிறது.
ஆசியா முழுவதிலுமிருந்து 11 நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டி தென் கொரியாவில் நடைபெற்று வருவதுடன் , நாளை 4ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் தொடரவுள்ளன.
இதுவரை நடைபெற்ற குழு நிலை போட்டிகளின் அடிப்படையில், சிங்கப்பூர் ஏற்கனவே குழு 'யு' இல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
அரையிறுதி போட்டி
போட்டியின் புதிய விதிகளின் கீழ், குழு 'ஏ' இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த மலேசியாவும், மூன்றாவது இடத்தைப் பிடித்த இலங்கையும் அரையிறுதியில் இன்று போட்டியிடுகின்றன.
ஏற்கனவே இலங்கை அணி, ஹொங்காங் மற்றும் இந்திய அணிகளை வீழ்த்தி முதல் இரண்டு போட்டிகளும் வெற்றியீட்டியுள்ளது. ஆனால் பின்னர் மலேசியா மற்றும் சிங்கப்பூர் அணிகளிடம் தோல்வியடைந்தது.
இதேவேளை 2023 ஆம் ஆண்டு தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய இளைஞர் வலைப்பந்து செம்பியன்சிப்பில், மலேசியா செம்பியன் பட்டத்தையும், சிங்கப்பூர் இரண்டாம் இடத்தையும் பிடித்தது, இலங்கை மூன்றாவது இடத்தை பெற்றது.