13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் வெளியான சஜித்தின் நிலைப்பாடு
13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எடுத்துரைத்திருந்தார்.
வடக்கில் மட்டுமின்றி தெற்கிலும் இந்த விடயத்தை தாம் வலியுறுத்தி வருவதாகவும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் தாம் இந்த உறுதி மொழியை வழங்கியதாகவும் தான் தளம்பும் நிலையை கொண்ட ஓர் அரசியல்வாதி அல்ல எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும், “இந்த 13ஆம் திருத்தச் சட்ட அமுலாக்கம் தொடர்பில் தேர்தல் காலத்தில் மட்டுமன்றி அதற்கு முன்னர் பல மேடைகளில் பல தடவைகள் தாம் வலியுறுத்தியுள்ளேன்.
இனப் பிரச்சினை
இனப் பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு.
இனங்களுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சட்டங்கள், சமூக கட்டமைப்பு அறநெறி பாடசாலை உள்ளிட்ட பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் சமூக கலாச்சார நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம்.
கடும்போக்கு வாத கொள்கை
எந்த ஒரு இன அல்லது மத சமூகத்தினரும் கடும்போக்கு வாத கொள்கைகளை பின்பற்றுவதற்கு இடமளிக்கப்படாது.
இலங்கை முழுவதிலும் சுமார் 2500 மாதிரி கிராமங்களை உருவாக்கும் ஓர் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். ஒரு கிராமத்தில் 50, 100 அல்லது 200 வீடுகள் நிர்மாணிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan
