தேர்தல் பிரசார விளம்பரங்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இவ்வாறான விளம்பரங்களை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என பொலிஸார் வாகன ஓட்டுனர்களை எச்சரித்துள்ளனர்.
அத்துடன், இது போன்ற விளம்பரங்களை காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் கோரிக்கை
இதற்கமைய, விளம்பரங்களுடன் காணப்படும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விளம்பரங்கள் அகற்றப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஒட்டப்பட்ட விளம்பரங்களை அகற்றும் போது வாகனங்களுக்கு சேதம் ஏற்படலாம்.

எனவே, பொலிஸாரின் தலையீட்டைத் தவிர்க்க வேண்டுமாயின், வாகன உரிமையாளர்கள் தானாக முன்வந்து இந்த விளம்பரங்களை அகற்றுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri