நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் : சஜித்
சிங்களம், தமிழ், முஸ்லிம் மற்றும் பேர்கர் ஆகிய எந்த இனமாக இருந்தாலும் ஒரு தாய் பிள்ளைகள் போன்று நாட்டை கட்டியெழுப்புவதற்கு கைகோர்க்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம்(09.06.2024) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசியல் சந்தர்ப்பவாதிகள்
மேலும், 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் பேசுவதற்கு பல தலைவர்கள் அஞ்சுவதாகவும், எதிர்கால தமது அரசாங்கத்தில் 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானவர்கள் அரசியல் சந்தர்ப்பவாதிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனையவர்களைப் போன்று அல்லாது நேர்படப் பேசும் பழக்கமுடைய தாம் 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |