13ஐ நடைமுறைப்படுத்துகின்ற பூச்சாண்டியில் ஏமாறப்போவது தமிழ் பேசும் மக்களே! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக கூறி சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற காரியம் அனைத்துமே பூச்சாண்டி காட்டுகின்ற வேலைகளாகத் தான் இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற பூச்சாண்டியில் ஏமாற்றப்பட போகின்றவர்கள் தமிழ் மக்களும், தமிழ் பேசும் மக்களும் மட்டும் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மலையக மக்களைப் பொறுத்தமட்டில் நீண்ட பல வருடங்களாக இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடிய அவர்களை இந்த நாடு நவீன அடிமைகளாகத் தான் அவர்களை வைத்திருக்கப் போகின்றதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,