13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆழமாக ஆராய வேண்டும்: ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி
13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக வழங்குவது தொடர்பில் ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக கடமையாற்றிய காலத்தில் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாது, தற்பொழுது நடைமுறைப்படுத்த எத்தனிப்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தன முதல் கோட்டாபய ராஜபக்ச வரையிலான ஜனாதிபதிகள் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாமைக்கு ஏதுவான காரணிகள் தொடர்ந்தும் சமூகத்தில் காணப்படுகின்றனவா என்பதனை ஆழமாக கவனிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையிலேயே 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்து தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஆழமாக ஆராயாமல் இந்த 13ம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இணக்கப்பாட்டை தாம் வெளிப்படுத்தவில்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 15 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
