13ஐ குறி வைத்து இனவாதம்: ரணிலை சாடிய தேரர்
தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொரளையில் உள்ள இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் நேற்று (3.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டார்.
தேரர்கள் தலையிட வேண்டும்
இவ்வாறு 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறிக்கொண்டு தமிழ் மற்றும் சிங்கள இன முரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிக்கிறார்.
13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்க தேரர்கள் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளோம் எனவும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |