13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவேன்: சஜித் உறுதி
இலங்கையின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நான் முழுமையாக நடைமுறைபடுத்துவேன் என
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premdasa) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி (Kilinochchi) - பாரதி வித்தியாலயத்தில், இன்று (09.06.2024) இடம்பெற்ற பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் கணினி மற்றும் உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"இன்று கிளிநொச்சி பாரதி வித்தியாலயத்தில் 647 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள். இங்கே பல்வேறு தேவைப்பாடுகள் காணப்படுகின்றன.
ஸ்மார்ட் கல்வி
இன்றைய தினம் பதினொரு இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்து கணினிகள் மற்றும் ஸ்மார்ட் போர்ட் பிரிண்டர் என்பவற்றை அன்பளிப்பு செய்திருக்கின்றேன்.

மேலும், இலங்கையில் உள்ள மாணவர்களுக்கான அனைத்து சுதந்திரமான கல்வி நடவடிக்கைக்காக பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக இதுவரை 225 பாடசாலைகளுக்கு 251.4 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளோம்.
இது ஒரு அரச நிதியோ அல்லது அரச ஒதுக்கீடோ அல்ல. இதைவிட 87 பாடசாலைகளுக்கு 424.1மில்லியன் ரூபா செலவில் பேருந்துகளை வழங்கி இருக்கின்றேன்.
அது மாத்திரமன்றி, 1083.1 மில்லியன் ரூபா செலவில் இலங்கை பூராகவும் மருத்துவ உதவிகளுக்காக வழங்கி இருக்கின்றேன்.
நான் எதிர்க்கட்சியாக இருந்து இவ்வாறான சேவைகளை ஆற்றி வருகின்றோம். இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 76 வருடங்களாக செய்யாத வேலையை எந்த அரச நிதியும் இல்லாமல் செய்வதையிட்டு நான் மகிழ்வு அடைகின்றேன்.
உறுதிமொழி
எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அபிவிருத்தி பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகின்றார்கள். சர்வதேச ரீதியாக ஒரு ஸ்மார்ட் முறையிலான கல்வியை அறிமுகப்படுத்துவோம். எனவே, ஸ்மார்ட் நாட்டை உருவாக்கும் பொறுப்பு இந்த அன்பளிப்பின் ஊடாக உள்ளது.

அதேவேளை, இலங்கையில் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்துவேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு நான் கொடுக்கின்றேன் சர்வதேச தொழிலாளர் தினத்திலும் நாங்கள் இந்த விடயத்தை அறிவித்திருந்தோம்.
எங்களுடைய நாட்டிலே சட்டரீதியான அரசியலமைப்பிலே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் உள்வாங்கப்பட்டு இருப்பதால் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு என ஒன்பது மாகாணங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு நான் அறிவிக்கின்றேன்.
மேலும், இந்தப் பிரதேசம் அரசியல், சமூக மற்றும் சமய ரீதியாக எங்களது உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.




| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam