13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்! ஜனாதிபதி உறுதி
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின்
இணக்கப்பாட்டிற்கு உட்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு
அதிகாரங்களுடன் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில்
விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதிகாரப்பகிர்வுக்கான, பட்டியல் 1 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரங்களுடனான 13 ஆவது திருத்தம், மாகாண சபைகள் பட்டியலில் பட்டியல் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் உட்பட நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்திற்கான தேசிய செயற்திட்டம்
இதற்கிடையில், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்துக்கான சட்ட வரைவு அரசியலமைப்பு மீளாய்வுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நல்லிணக்கத்திற்கான தேசிய செயல் திட்டமும் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகமும் நியமிக்கப்படவுள்ளது.
இதேவேளை வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பிலும் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
You My Like This Video





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
