13ஆவது திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்பதற்கு தயாரில்லை:சட்டத்தரணி க.சுகாஸ்(Photos)
சிங்கள தேசத்திடமும் சர்வதேச சக்திகளிடமும் தமிழ் மக்களின் நலன்களை அடகு வைத்த தரப்புக்களை தமிழ் மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக கறுப்புக்கொடி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மக்கள் திரட்சியின் வெளிப்பாடுகள்
மேலும் கூறுகையில்,“இன்றைய மக்கள் திரட்சியின் வெளிப்பாடுகள் சர்வதேசத்திற்கு பல செய்திகளை தெரிவித்துள்ளது.
அதாவது இலங்கையிலுள்ள சிங்கள தலைவர்கள் தெரிவிக்கின்ற விடயங்கள் வேறு, தமிழ் தேசித்தின் அபிலாசைகள் வேறு, என்பது இன்று தெட்டத்தெளிவாகியுள்ளது.

தமிழ் தேசம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒற்றையாட்சிக்கு ஒட்டப்பட்ட 13வது
திருத்தச் சட்டத்தை தீர்வாக ஏற்பதற்கோ அல்லது தீர்வினுடைய ஆரம்பப்புள்ளியாக
கூட கருதுவதற்கு தயாரில்லை என்பதை இன்றைய எழுச்சி காட்டி நிற்கின்றது.”என தெரிவித்துள்ளார்.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam