ஜனாதிபதி நிதியத்தில் பல கோடி ரூபாய்களை பெற்றுக் கொண்ட 56 எம்.பிக்கள்
ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஐம்பத்தாறு நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் சட்டத்திட்டங்களை மீறி ரூ.130 மில்லியனுக்கும் அதிகமான தொகையை (சுமார் 13 கோடி) மருத்துவ உதவியாக பெற்றுக் கொண்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பப்படிவம், மாதாந்த வருமான வரம்பு, பிரதேச செயலாளரின் அறிக்கை, நிதி, சொத்துக்கள் மற்றும் மருத்துவ உதவி வரம்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இந்த பண உதவி வழங்கப்பட்டுள்ளது.
நாசமாக்கப்பட்டுள்ள பல கோடிகள்
மேற்குறிப்பிட்ட நிதி உதவிகள் 2005 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஜனாதிபதி நிதியிலிருந்து கடன்களை வழங்குவதற்கான திட்டங்கள் இல்லாவிட்டாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான மருத்துவ கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அவை மீள வசூலிக்கப்படவில்லை.

முன்னாள் பிரதமர் ஒருவருக்கும் கிட்டத்தட்ட ரூ.30 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலத்தின் அறிக்கைகளின் படி, ரூ.13.7 மில்லியனுக்கும் அதிகமாக மீள அறவிட்டும் கொள்ளும் அடிப்படையில் வழங்கப்பட்ட போதிலும்,குறித்த பணம் மீள பெற்றுக் கொள்ளப்படவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.