மட்டக்களப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கித்துள் முந்தனையாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விசேட நடவடிக்கை விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்றைய தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளது.
13 பேர் கைது
இதன்போது மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 13 உழவு இயந்திரங்கள் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களும், மீட்கப்பட்ட உழவு இயந்திரங்களும் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் கித்துள் மற்றும் கரடியனாறு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.







