இஷாராவின் அழகான தோற்றத்திற்குப் பின்னால் உள்ள இரகசியம் - அடிக்கடி விசாரித்த ஒரு யாழ். தமிழர்!
ஜே.கே.பாஹியின் வேண்டுகோளின் பேரில் கே.சிவதாசன் என்ற யாழை சேர்ந்தவர் இஷாரா செவ்வந்தியை ஒரு மீன்பிடி படகில் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக கொழும்புக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான நிசாந்த சொய்சா தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை வானொலியின் இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி,நேபாளத்திற்கு சென்று அவரின் உருவத்தை ஒத்த பெண்ணான தக்சியை கண்டு வியப்பில் ஆழ்ந்ததாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நேபாளத்தில் தங்கியிருந்த காலத்தில் செவ்வந்தி தனது உடல் அழகு மற்றும் முகத்தை பொலிவாக வைத்திருக்க அழகுக்கலை நிலையங்களுக்கு அடிக்கடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



