கட்டுநாயக்க விமானத்தில் கைவிடப்பட்ட 13 பொதிகள்: சோதனையில் சிக்கிய பெறுமதியான பொருள்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உரிமை கோரப்படாத நிலையில் கைவிடப்பட்டிருந்த 13 பயணப் பொதிகளில் இருந்து சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(27.03.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட 928 கார்டன் சிகரெட்டுகள் சுமார் 28 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது என விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுங்க அதிகாரிகளின் கடுமையான சோதனை நடவடிக்கைகளுக்கு அஞ்சி, அவற்றை வெளியே கொண்டு செல்ல முடியாத நிலையில், கடத்தல்காரர்கள் இந்தப் பயணப் பொதிகளை விமான நிலையத்திலேயே கைவிட்டுச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 பயண பொதிகள் பறிமுதல்
கடந்த ஒரு மாத காலமாகச் சுங்கப் பிரிவினரின் பொறுப்பில் இருந்த இந்தப் பொதிகள் குறித்து எவரும் உரிமை கோரவில்லை.

இதனையடுத்து, நேற்று(27) குறித்த 13 பயணப் பொதிகளும் சுங்க அதிகாரிகளால் திறந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதன்போது, அவற்றுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான சிகரெட் தொகையை அதிகாரிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சிகரெட் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைச் சுங்கத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam