நாளைய தினம் சில பகுதிகளில் 3 மணிநேர நீர்வெட்டு
களனி மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் நாளை (14) 13 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை காலை 8.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை இந்த நீர்வெட்டு நடைமுறையில் இருக்கும்.
பராமரிப்புப் பணிகள்
இதன்படி, பேலியகொடை, வத்தளை - மாபோல, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க - சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல ஆகிய பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா ஆகிய பிரதேச சபைகளின் சில பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளுமாறும், நீர் விநியோகம் தடைப்படும் நேரத்தில் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.