பேருந்து விபத்தில் 13ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் காயம் (Video)
வவுனியா திருகோணமலை வீதி கெபித்திகொல்லாவ பகுதியில் இன்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள்13 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வவுனியாவில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பேருந்துகள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் 12ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் பேருந்தின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாய் குறுக்கிட்டமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri