மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் இந்தியா சென்றுள்ளனர்.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்திய தலைவர்களுடன் இடம்பெரும் பேச்சுவார்த்தையில், மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக இன்று (20.07.2023) ஜீவன் தொண்டமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்பிரமணியம் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சு நடத்தவுள்ளார்.
10 ஆயிரம் வீட்டு திட்டம்
இந்த பேச்சுவார்த்தைகளில் தான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினரும் பங்கேற்கவுள்ளேம்.
மேலும், மலையக மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் சம்பந்தமாக இந்திய தரப்புக்கு எடுத்துரைக்கவுள்ளோம். மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அரச அங்கீகாரத்துடன் தேசிய மட்ட நிகழ்வு எதிர்வரும் நவம்பரில் நடத்தப்படவுள்ளது.
இது சம்பந்தமாகவும், இந்நிகழ்வில் இந்திய பிரதிநிதிகள் பங்கேற்பதற்கான அழைப்பும் கையளிக்கப்படும்.
அத்துடன், இந்தியாவின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டம், மலையக பல்கலைக்கழக விவகாரம், மலையக மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரீசில்களை அதிகரித்துக்கொள்ளல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் இந்திய தரப்புடன் கலந்துரையாடப்படும்
மேலும் இந்திய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளிலும் ஈடுபடவுள்ளேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொந்தளிப்பு நிலையில் உள்ள இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சம்பந்தமாகவும் இலங்கை, இந்திய தரப்புகள் பேச்சு நடத்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
