கஜேந்திரகுமார் அணி 13ஐ ஏற்றுக்கொள்ளாதது வேடிக்கையானது: சாடுகிறார் கருணாகரம்(Video)
தென்னிலங்கை இனவாதிகள் 13வது திருத்ததினை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறிவரும் அதே கருத்தினை கஜேந்திரகுமார் அணியினரும் கூறுவது வேடிக்கையானது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று(27.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''வடகிழக்கு இணைந்த மாகாணங்கங்களுக்கு சமஸ்டி அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது தீர்வாகவுள்ளபோதிலும் தற்போதைய நிலையில் 13வது திருத்தினை முழுமையான நடைமுறைப்படுத்தி அதனை ஒரு முதல்படியாக கொண்டு தீர்வு நோக்கிய செயற்பாட்டினை முன்கொண்டு செல்லமுடியும்.
வடகிழக்கு தழுவிய கடையடைப்பு
மேலும், வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் நாளை வெள்ளிக்கிழமை வடகிழக்கு தழுவிய கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் செயற்படுவோம். அவர்களின் குரல்களுக்கு நாங்களும் மதிப்பளித்து வடகிழக்கு தமிழர்கள் ஹர்த்தாலை அனுஸ்டிப்போம்.'' என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
