ரணிலுக்கு மோடி - பைடன் கிடுக்குபிடி! ஈழத் தமிழருக்கு இறுதி சந்தர்ப்பம்(Video)
சகல தமிழ் தேசிய கட்சிகளையும் ஒன்றாக இணைத்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது, 13ஆம் திருத்தச்சட்டத்தை நடைமுறை படுத்துவதற்கான அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவதற்காகவே என இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தினுடைய ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கிடையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தமிழ் பிரதிநிதிகளை அண்மையில் சந்தித்த விவகாரம் 13ஆம் திருத்தச்சட்டத்தை வலியுறுத்தருவதற்கும், அதன் மீதான அழுத்தத்தை இலங்கை அரசாங்கம் மீது பிரயோகிக்கும் நோக்கத்திலேயே ஆகும்.
எனினும் இந்த விடயத்தை தமிழ் தேசிய தரப்புக்கள் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
ஆனால் 13ஆம் திருத்தச்சட்டம் தீர்வோ, இல்லையோ என்பதை விட அதனை நடைமுறைப்படுத்தவேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்திற்கு இருக்கின்றது.
இந்த திருத்தச்சட்டம் இலங்கை அரசியல் யாப்பிலே ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட சட்டம். அதனை நடைமுறைப்படுத்த எவ்வித ஒப்புதல்களும் தமிழ் தரப்புக்களிடம் இருந்து தேவையில்லை.
ஆனால் அதை ஜனாதிபதி நினைத்தால் 24 மணிநேரத்திற்குள் நடைமுறைப்படுத்தலாம்." என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |