ரணில் டெல்லி பயணம்: கடித விவகாரத்திலும் தமிழ் தரப்புகளிடையே கருத்து வேறுப்பாடு (Video)
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய பயணத்திற்கான தயார்படுத்தல்களை மேற்கொள்ள இந்திய வெளியுறவுத்துறையின் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்திலும், வெளியுறவுத்துறை செயலாளரின் வருகையிலும் இலங்கை - இந்திய உறவுகளுக்கிடையே சிறந்த எதிர்கால பொருளாதார ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த விஜயத்தினை மையப்படுத்தி, வடகிழக்கு தமிழரின் தீர்வுக்கு 13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பிலான கடிதங்கள், தமிழ் அரசியல் தலைமைகளால் இந்திய பிரதமருக்கு பறந்தவண்ணம் உள்ளன.
இவ்வாறான நிலையில் தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கடிதத்தை மோடிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் அந்த விடயம் சாத்தியமற்று போனது.
மேலும், 13 தொடர்பாக இந்திய பிரதமருக்கு அனுப்பப்படும் கடித விவகாரத்திலும் கூட தமிழ் தரப்புக்கள் தனித்தனியான போக்குகளை கொண்டு செயற்படுவதால், தமிழரின் தீர்வென்பது முழுமைபெறாத விடயமாகவே தொடரும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் விடயங்களை இன்றைய செய்திவீச்சு நிகழ்ச்சியில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |