பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 128 மணி நேரமாக பசியுடன் உயிருக்கு போராடிய குழந்தை! வைரலாகும் காணொளி
துருக்கியில் கடந்த 5 ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில் 128 மணி நேரமாக இடிபாடுகளில் சிக்கியிருந்து 2 மாத பச்சிளம் குழந்தையொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
துருக்கியில் ஹடாய் நகரில் கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உடனே மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்க இடிபாடுகளை வேகமாக அகற்றி குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனர்.
மேலும் குழந்தை பல மணி நேரம் பசியுடன் இருந்தபோதிலும் உயிர் பிழைத்துள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடினமான முயற்சிகளுக்குப் பின்னர் குழந்தை உயிருடன் இருப்பதாக துருக்கிய சுகாதார அமைச்சர் Fahrettin Koca காணொளியொன்றினை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளரார்.
Hatay’da enkaz altından 107. saatte kurtarılan, saatler süren açlığına rağmen hayatta kalan, tüm Türkiye’nin ekranlardan tanıyıp bağrına bastığı bebeğimiz Adana Şehir Hastanesinde ve sağlık durumu gayet iyi. pic.twitter.com/UotsJFwJAI
— Dr. Fahrettin Koca (@drfahrettinkoca) February 12, 2023

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 13 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
