தமிழரசு கட்சி ஸ்தாபகரின் 127ஆவது ஜனனதினம்! தந்தைசெல்வா நினைவிடத்தில் ரவிகரன் எம்.பி அஞ்சலி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் 127ஆவது ஜனனதினம் இன்று பல்வேறு இடங்களிலும் நினைவுகூரப்படுகின்றது.
அஞ்சலி
தந்தை செல்வா என அறியப்படும், இவருடைய ஜனனதினத்தை இன்று (31.03.2025) இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருமான துரைராசா ரவிகரன் நினைவுகூர்ந்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலிகளை மேற்கொண்டுள்ளார்.
குறித்த அஞ்சலியில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநிதிகள் சிலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








