மகிந்தவுக்கு கடும் நெருக்குவாரம்: பதவி விலகாவிட்டால் தூக்கியெறியப்படும் ஆபத்து!
அரசாங்கத்திற்கு எதிராக தற்போது 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், தற்போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வரைவை தயாரித்து, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபியுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் அந்த இரண்டு எதிர்க்கட்சிகளும் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அரசாங்கம் பதவி விலகாவிட்டால், இந்த வாரத்திற்குள் நம்பிக்கையில்லா பிரேரணை கண்டிப்பாக கையளிக்கப்படும் என்று அவர் கூறினார்.