சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட பூசகருக்கு கடூழிய சிறைத் தண்டனை
கிளிநொச்சி பளைப் பகுதியில் பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
8 வருடங்களின் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றம் 12 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கிளிநொச்சி பளைப் பகுதியில கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதலாம்
திகதி தனக்கு உறவு முறையான பதினாறு வயதிற்கும் குறைவான சிறுமி ஒருவரை பாலியல்
துன்புறுத்தலுக்கு உட்படுத்தய பூசகர் ஒருவரை கைது செய்து அவருக்கு எதிராக
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில வழக்கு தொடரப்பட்டு நேற்று (18-01-2024) குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ. எம் .ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் பதினாறு வயதிற்கு குறைவான சிறுவர்கள் இவ்வாறு பாலியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டாலும் ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே பொலிஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வாறு மேல் நீதிமன்றம் வரைக்கும் கொண்டு வரப்படுகின்றன.
மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்ட மன்று பன்னிரெண்டு ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்துள்ளதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்துமாறும் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |