யாழில் 12 வயது சிறுமி எடுத்த தவறான முடிவு: வெளியான காரணம் - செய்திகளின் தொகுப்பு
யாழில் தொடர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயதான சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் குறித்த சிறுமி உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு, சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலையில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுமி உடல்நலம் தேறிய பின்னர், சிறுமிக்கு உளவள சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்போது, தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி குறுந்தகவல்கள் ஊடாக ஆபாச குருஞ்செய்திகளை அனுப்புவதாகவும், தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்த காரணத்தால் தான் கடும் விரக்தியடைந்ததால் உயிர் மாய்க்க முயன்றதாக தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து சம்பம் தொடர்பில் வைத்தியசாலை ஊடாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri