இஸ்ரேலில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 12 இலங்கையர்கள்
அண்மைக் காலத்தில் மனநலப் பிரச்சினைகள் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக சுமார் 12 இலங்கையர்கள் இஸ்ரேலில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
இத்தகைய பாதிப்புகள் உள்ளவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட குடும்பங்களை இலங்கைத் தூதரகம் கேட்டுக்கொள்கிறது என்று தூதர் நிமல் பண்டார மேலும் கூறியுள்ளார்.
இஸ்ரேலில் கட்டுமானப் பணிகளில் முன்னர் பணியாற்றி வந்த மேலும் இரண்டு இலங்கையர்கள் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலில் இருந்து கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், இரண்டு இலங்கையர்களும் இன்று துபாய் வழியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் இவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
உறுதிசெய்து, புறப்படுவதற்காக விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் மேலும் கூறினார்.



