நெரிசலில் சிக்கி 12 பேர் பலி : மடகாஸ்கரில் சோகம்
மடகாஸ்கரில் தேசிய மைதானத்திற்குள் ரசிகர்கள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 7 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 80 பேர் காயமடைந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் உள்ள அன்டனானரிவோவில் இந்திய பெருங்கடல் தீவு விளையாட்டுகளின் தொடக்க விழா நேற்று (25.08.2023) ஆரம்பமாகியுள்ளது.
மடகாஸ்கர் தேசிய மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் நுழைவாயிலில் குவிந்திருந்துள்ளனர்.
மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் நெரிசல்
இந்நிலையில் திடீரென ரசிகர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் நுழைய முயன்றதால் அங்கு கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மைதானத்தின் காவலாளிகளால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இந்த நெரிசலில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களின் 11 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
