மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு அருகில் 12 கண்ணிவெடிகள் மீட்பு
மட்டக்களப்பு(Batticaloa) விமான நிலையத்தின் எல்லையான திருப்பெரும்துறை பகுதியில் 12 நிலக் கண்ணிவெடிகளை கண்ணிவெடி அகற்றும் சர்வதேச நிலச்சுரங்க ஆய்வு குழுவான (எம்.ஏ.ஜி) அமைப்பினர் மீட்டெடுத்து நீதிமன்ற அனுமதியுடன் இராணுவத்தினர் அதனை வெடிக்கவைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று(05.07.2024) இடம்பெற்றுள்ளது.
யுத்தகாலத்தில் திருப்பெரும்துறை வேளாங்கன்னி தேவாலயத்திற்கு அருகில் அமைக்கப்பட்ட விமானப்படை முகாமை சுற்றி அந்த பகுதியில் ஏராளமான கண்ணிவெடிகள் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளன.
புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள்
இந்த நிலையில், அங்கிருந்து விமானப்படை முகாம் மூடப்பட்டு படையினர் வெளியேறிய போதும் நிலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருந்துள்ள நிலையில் அவற்றை அகற்றுமாறு படையினர் எம்.ஏ.ஜி கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்திடம் கோரியதையடுத்து அந்த பகுதியினை அடையாளமிட்டு கண்ணிவெடிகளை தேடி சோதனையிடும் நடவடிக்கையினை புதன்கிழமை (04) ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, அந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 12 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து மீட்டெடுத்துள்ளனர்.

இதனை உடனடியாக செயலிழக்க வேண்டியதையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று மின்னேரியாவிலுள்ள குண்டுகளை செயலிழக்கும் இராணுவப் பிரிவினரை வரவழைத்து அதனை வெடிக்கவைத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் மக்கள் குடியேறி வசித்துவருவதாகவும் தொடர்ந்தும் கண்ணிவெடிகள் உள்ள பகுதிகள் அடையாளமிடப்பட்டு சோதனை நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

மேலும், புதைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் மனிதர்களோ மிருகங்களோ இன்று வரை அதில் அகப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri