தமிழ் நாட்டில் அரசியல்வாதி படுகொலை: பஞ்சாப்பில் சிவசேனா தலைவருக்கு வாள்வெட்டு
தமிழ்நாட்டின் சென்னையில் பகுஜன் சமாஜ்வாதி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ரோங் கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கொலை சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது
சென்னை பெரம்பூரில் வைத்து அவர் அடையாளம் தெரியாதவர்களின் அரிவாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

ஆம்ஸ்ரோங் வீட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் அவரை வாளால் வெட்டிய பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்துச் சென்றபோதும்;, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவர்களை கைது செய்ய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சம்பவத்துக்கான காரணங்களும் வெளியாகவில்லை.
சிவசேனாவின் பஞ்சாப் தலைவருக்கு வாள்வெட்டு
இதேவேளை சிவசேனாவின் பஞ்சாப் தலைவர் சந்தீப் தாபர் இன்று மதியம் லூதியானாவில் உள்ள சிவில் மருத்துவமனையின் அருகில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

அவர் மீது வாள்வெட்டு தாக்குதலை நடத்திய மூவர், சந்தீப் தாபரின் உதவியாளரது கைத்துப்பாக்கியையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
தாக்குதலை அடுத்து தாபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த தாக்குதல் இந்து மதத்தவர் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது,
அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam