வவுனியாவில் 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று இரவு வெளியாகின.
அதில் எல்லப்பர் மருதங்குளத்தில் மூவருக்கும், ஆடைத்தொழிச்சாலையில் பணிபுரியும் சூடுவெந்தபுலவு சாந்தசோலை, கற்பகபுரம் பகுதிகளை சேர்ந்த மூவருக்கும், கூமாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், மாமடு பகுதியில் ஒருவருக்கும், ஓயார்சின்னக்குளம் பகுதியில் ஒருவருக்கும், திருநாவற்குளம் பகுதியில் ஒருவருக்கும், சிறிராமபுரம் பகுதியில் ஒருவருக்கும், தோணிக்கல் பகுதியில் ஒருவருக்கும் என 12 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்தவும் சுகாதார
பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.