பருத்தித்துறை கடலில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 மீனவர்கள் கைது
யாழ். வடமராட்சி, பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அந்த மீனவர்களின் 4 படகுகள், அவற்றின் வெளியிணைப்பு இயந்திரங்கள் மற்றும் அவர்களால் பிடிக்கப்பட்ட கடலட்டைகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடம் கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை என்றும், இதனாலேயே அவர்களைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர் என்றும் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri
