115 ஆண்டுகளுக்கு முன் மாயமான சபிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு
115 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு அருகே மாயமான சபிக்கப்பட்ட கப்பலின் உடைந்த பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வரலாற்றில் மூழ்கிய பல கப்பல்கள் பற்றிய உண்மைகளும் கதைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தி இருக்கின்றது.
அவ்வாறு விபத்துக்குள்ளான கப்பல்கள் மூழ்கியதால் பாரிய உயிர்ச் சேதமும், உடமைச் சேதமும் ஏற்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன. அதே போலவே இந்த சபிக்கப்பட்ட கப்பலுக்கும் ஒரு வரலாறு உண்டு.
சபிக்கப்பட்ட கப்பல்
இந்த கப்பல் 115 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் பயணித்தபோது திடீரென காணாமல் போனதாக கூறப்படுகின்றது.
எனினும், தற்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு கப்பல் இருந்த இடம் தெரியவந்துள்ள நிலையில் அதிர்ச்சிகரமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அடெல்லா ஷோர்ஸ் (Adella Shores) என்ற இந்தக் கப்பல் 1894 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள ஜிப்ரால்டரில் ஷோர்ஸ் லம்பர் என்பவரால் கட்டப்பட்டுள்ளது.
கப்பலைக் கட்டிய நிறுவனத்தின் உரிமையாளரின் மகளின் நினைவாக இந்த கப்பலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
நீராவியால் இயங்கும் 735 டன் மரக் கப்பல் 15 ஆண்டுகளில் இரண்டு முறை மூழ்கிய நிலையில் மாலுமிகள் இந்த கப்பலை சபிக்கப்பட்ட கப்பல் என்றும் அழைத்துள்ளனர்.
195 அடி நீளமுள்ள இந்தக் கப்பல் 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி உப்பு ஏற்றப்பட்ட நிலையில் 14 பேருடன் கப்பல் மினசோட்டாவுக்குப் புறப்பட்டுள்ளது.
இருப்பினும், 1909ஆம் ஆண்டு மே 1 ஆம் திகதியன்று, மிச்சிகனில் உள்ள வைட்ஃபிஷ் பாயிண்டில் இருந்து கப்பல் திடீரென காணாமல் போனயுள்ளது.
2021 ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் 115 ஆண்டுகளுக்குப் பிறகு கடலில் 650 அடி ஆழத்தில் கப்பலைக் கண்டுபிடித்துள்ளனர்.
மாயமான கப்பல் கடைசியாக பார்த்த இடத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் காணப்பட்டுள்ளதுடன் கிரேட் லேக்ஸ் ஷிப்ரெக் ஹிஸ்டாரிகல் சொசைட்டி மூலம் கப்பல் விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
புதிய கப்பல் கட்டும்போது அதன் மேல் மது போத்தல் உடைக்கும் வழக்கம் பின்பற்றப்பட்டுள்ளது.
ஆனால், அடெல்லா ஷோர்ஸ் (Adella Shores) கப்பல் கட்டும் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மது அருந்தும் பழக்கம் இன்மையால் கப்பலில் இருந்த மது போத்தலுக்கு பதிலாக தண்ணீர் போத்தலை உடைத்துள்ளனர்.
இந்த காரணத்திற்காக கப்பல் சபிக்கப்பட்டதாக மக்கள் நம்பியதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |