ரஷ்யாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கையை தொடங்கியுள்ள ரஷ்யா, அவரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலிலும் சேர்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய உள்விவகார அமைச்சகத்தின் தரவுத்தளமே ஜெலன்ஸ்கியை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் பிடியாணை
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினே சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்படும் நிலையில் இருப்பவர் என உக்ரைன் வெளிவிவகார அமைச்சரகம் பதிலளித்துள்ளது.
மேலும், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புடினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணை நடைமுறையில் இருப்பதை அந்த நாடு நினைவில் கொள்ள வேண்டும் என்று உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.
இது மட்டுமின்றி, உலகில் 123 நாடுகள் விளாடிமிர் புடினை(Vladimir Putin)கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கும் அதிகாரம் கொண்டவை என்றும் உக்ரைன் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யா தற்போது பெரும் விரக்தியில் இருப்பதாலையே, இதுபோன்ற செயல்களில் கவனம் செலுத்துவதாகவும் உக்ரைன் விமர்சித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 51 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
