மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் விபரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் தொற்றினால் இன்று மூவர் உயிரிழந்துள்ளதுடன், 114 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் இன்று தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் சுகாதார பிரிவில் ஒருவரும் , கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் ஒருவரும், காத்தான்குடியில் ஒருவருமாக மூவர் உயிரிழந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில்
மட்டக்களப்பு - 31 ,காத்தான்குடி - 57 ,ஓட்டமாவடி 02 ,வாகரை-12 ,கிரான்-01 ,கோறளைப்பற்று மத்தி - 02, செங்கலடி - 01 ,ஏறாவூர் - 06 ,வெளி மாவட்டத்தார் 02
பேர் உட்பட 114 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளார்.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
