இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு வாகனங்கள்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 சொகுசு வாகனங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்ட 5 வாகனங்களை திருப்பி ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் உரிய வாகனங்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், உதவி சுங்கப் பணிப்பாளரிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுங்க வரி இழப்பு
அறுபது கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான இந்த ஐந்து வாகனங்கள் மூலம் நாட்டுக்கு 300 மில்லியன் ரூபா சுங்க வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்தது.
குறித்த ஐந்து வாகனங்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறு நீதவான் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
