11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகாரம்!பிரிட்டோ பெர்னாண்டோ வெளியிட்ட தகவல்
கொழும்பில் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளை தொடரப்போவதில்லையென்று சட்டமா அதிபர் எந்த அடிப்படையில் தீர்மானித்தாரென காணாமற்போனவர்களின் குடும்ப ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதன்போதே காணாமற்போனவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ (Brito Fernando) இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மீதும், இலங்கையின் சட்டம் தொடர்பிலும் தமக்கு நம்பிக்கையில்லையென அந்த ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீதான குற்றச்சாட்டுகளை, தொடரப்போவதில்லை என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கடந்த ஒக்டோபா் 13ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, 2008 மற்றும் 2009 இல் 11 பேரை கடத்தி, சித்திரவதை, அச்சுறுத்தி பணம் பறித்தமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய தீர்மானித்திருந்தார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகவும் முன்னாள் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
எனினும் குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையை மீளப்பெறுவதற்கு புதிய சட்டமா அதிபர் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி காணாமற்போனோரின் பெற்றோர்கள் நான்கு பேர் இடைக்கால தடையுத்தரவு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் சட்டமா அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை காணாமற்போனவர்களின் குடும்ப ஒன்றியம் முன்னெடுத்தது.
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri