ஒன்லைன் கேம் விளையாட்டால் ஏற்பட்ட விபரீதம்! 11 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை
களுத்துறை - பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தில் கைப்பேசி விளையாட்டுக்கு அடிமையாகிய பாடசாலை மாணவரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பண்டாரகம, ரய்கம, குன்கமுவ பிரதேசத்தை சேர்ந்த இருசு அஷேன் என்ற 11 வயதுடைய மாணவன் அவரின் வீட்டில் அமைந்திருந்த கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மாணவனின் பெற்றோர் தெரிவிக்கையில்,
ஒன்லைன் படிப்பிற்காக போன் ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். பின்னர் ஒன்லைன் படிப்பு நின்று விட்டது. மகன் பின்னர் கேம் விளையாட பழகி விட்டார். பெற்றோரிடம் காலில் விழுந்து வேண்டுகிறேன். பிள்ளைகளுக்கு போன் கொடுக்கவே வேண்டாம்.
வெற்றிலைக் கூறு விற்று தனது மகனின் கல்வி நடவடிக்கைகாக மாதாந்தம் பணம் செலுத்தும் வகையில் தவணை முறைக்கு கைப்பேசி ஒன்றை வாங்கிக் கொடுத்தேன். மதியம் 2.45 மணியளவில் கீழ் கடையில் இருந்து எனக்கு போன் ஒன்று வந்தது. வெற்றிலைக்கூறு ஒன்று கூட இல்லை என்று. பின்னர் நான் மகனை அழைத்தேன்.
மகன் விரைவாக வந்தார். பின்னர் மகனிடம் நான் கூறினேன், விரைவாக வெற்றிலைக்கூறு கொஞ்சம் சுற்ற வேண்டும் என்று. அப்பா பாக்குகளை வெட்டி தாருங்கள் நான் விரைவாக வெற்றிலைக் கூறு சுற்றுகிறேன் என மகன் கூறினார்.
நான் வெற்றிக்கூறுகளை பையில் போட்டுக் கொண்டு வௌியேறும் போது மகனும் பின்னாலேயே வந்தார். பின்னர் நான் முச்சக்கரவண்டி ஒன்றை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றேன். பின்னர் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்து மகனே என்று அழைத்த போது மகன் கதைக்க வில்லை.
வழமையாக நான் வீட்டுக்கு வந்து மகனை அழைக்கும் போது எங்கிருந்தாலும் அப்பா என குரல் கொடுக்கும் பழக்கத்தை மகன் கொண்டிருந்தார். நான் அறைக்கு சென்று பார்த்தேன் அங்கு மகன் இருக்கவில்லை. பின்னர் சமையல் அறைக்கு சென்று பார்த்த போது, மகன் கொங்கிரீட் தூண் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
பின்னர் மகனின் கால்களை பிடித்து தூக்கிக் கொண்டு கழுத்தில் இருந்த கயிற்றை அகற்ற முற்பட்டேன். எனினும் என்னால் அதை செய்ய முடியவில்லை. 5 நிமிடங்களின் பின்னர் மகனை ஹொரனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் மகன் இறந்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது,சிறுவனின் திடீர் மரணம் தொடர்பில் பாணந்துறை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சிறுவன் கைப்பேசி விளையாட்டுக்களுக்கு அடிமையாகியிருந்தமை தெரியவந்துள்ளது.
சிறுவனின் சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை திடீர் மரண பரிசோதகர் சுமேத குணவர்தன முன்னிலையில் இடம்பெறவுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
