குளவிக்கொட்டுக்கு இலக்காகி 11 பேர் பாதிப்பு
பண்டாரவளை பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை மைதான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது இன்று (24.05.2023) பண்டாரவளை - ஓபட எல்ல பிரதேச பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் அருகில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்த குளவிக்கூடு திடீரென்று கலைக்கப்பட்டதன் காரணமாகவே மாணவர்கள் மீது குளவிக் கொட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
மறு அறிவித்தல்
இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 06 பாடசாலை மாணவர்கள் மற்றும் 05 பெற்றோர்கள் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பண்டாரவளை வலயக் கல்விப் பணிமனையின் ஆலோசனைக்கு ஏற்ப மறு அறிவித்தல் வரை பாடசாலை மூடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
