சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைது
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
27 வயதுக்கும் 67 வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
அனுமதி பத்திரம் இன்றி சட்ட விரோதமாக முறையில் பசறை உடகம பரகாகந்தூர பகுதியில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுபடுவதாக பசறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
இந்நிலையில், குறித்த பகுதிக்கு சென்று தேடுதலை மேற்கொண்ட போது 11 நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு மாணிக்கக் கல் அகழ்விக்கு பயன்படுத்தப்படும் கல் உடைக்கும் இயந்திரம் உட்பட மேலும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
தொடர்ந்து சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |