தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது
பொலநறுவை - வெலிகந்த, நாமல்கம பிரதேசத்தில் தொல்பொருள் அகழ்வு முயற்சி குற்றச் செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரு இராணுவத்தினர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று மோட்டார் வாகனங்கள் மற்றும் ஒரு கெப் வண்டியுடன் அவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பதுளையைச் சேர்ந்த ஒருவர், போலி அடையாள அட்டை, இராணுவ சீருடைகள் மற்றும் பிரிகேடியர் ஒருவரின் ஆடை போன்றவற்றை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இராணுவத்தினர்
இதனை தவிர இரண்டு இராணுவத்தினரும் திருகோணமலை ஹென்றிக் கோட்டையில் பணியாற்றுபவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

எஞ்சிய எட்டு சந்தேக நபர்களும் யக்கல, பாதுக்க, கலேவெல, மில்லவ மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொல்ஹெங்கொடை இராணுவ முகாமில் இருந்து சென்ற இராணுவப் பொலிஸார் மற்றும் வெலிகந்த பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        