நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்த யாழ். நீதிமன்றம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தபோது, அவருடைய வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டது.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று(07.01.2023) இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபரின் ஆலோசனை
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் மற்றும் புவனேந்திரம் பானுப்பிரியன் ஆகியோர் பிரதிவாதிகளுக்காக மன்றில் முன்னிலையாகினர்.
விசாரணையின்போது, 'வழக்குக்காக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட வேண்டும்' என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.
இதையடுத்து, வழக்கை கிடப்பில்போட்டு பிரதிவாதிகளை விடுவிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரியதையடுத்து, அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு வழக்கு கிடப்பில் போடப்பட்டு பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி' என்ற தொனிப்பொருளில் சுதந்திரதினத்தை கரிநாளாக அறிவித்து, பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட 7 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன், வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஏழு பேருக்க எதிராக, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் மற்றும் புவனேந்திரம் பானுப்பிரியன் ஆகியோர் பிரதிவாதிகளுக்காக மன்றில் முன்னிலையாகினர்.
இந்நிலையில், சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவேண்டும் என்று பொலிஸார் மன்றுரைத்தனர். இதையடுத்து வழக்கு கிடப்பிலிடப்பட்டு பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகருடன் சிறகடிக்க ஆசை கோமதி பிரியாவிற்கு திருமணம்? யார் அந்த நடிகர் தெரியுமா Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
