11 அலுவலக தொடருந்துகள் முடக்கம்
இன்று காலை 11 அலுவலக தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து மொரட்டுவை, பாணந்துறை, வாதுவ, நீர்கொழும்பு, அம்பேபுஸ்ஸ, பாதுக்க மற்றும் ராகம ஆகிய இடங்களுக்குச் செல்லும் தொடருந்துகளும் அந்த நிலையங்களில் இருந்து மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் தொடருந்துகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடமைக்கு சமூகமளிக்காமை
தொடருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கடமைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் குறித்த தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தாண்டு விடுமுறைகளிலிருந்து பெரும்பாலான அலுவல பணியாளர்கள் வேலைகளுக்கு திரும்பும் நிலையில் 11 தொடருந்துகள் ரத்து செய்யப்பட்டமை அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |