இலங்கையில் கோவிட் மரணங்கள் சடுதியாக உயர்வு! இன்றும் 11 பேர் பலி
இலங்கையில் மேலும் 11 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 1,851 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 119,424 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
100,885 பேர் நேய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் வைரஸ் தொற்றுக்குள்ளான 17,805 நோயாளிகள் தற்போது சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam