11 வெளிநாட்டவர்களின் மோசமான செயல்.. பொலிஸார் அதிரடி நடவடிக்கை
இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 வெளிநாட்டவர்களை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களில் 08 பேர் ஆண்கள் எனவும் 03 பேர் பெண் சந்தேக நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (04) இரவு சோதனை மேற்கொண்டனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள்
இதன்போது, கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 20 கையடக்க தொலைபேசிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு டெப்லெட் கணினி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடைய இந்தியர்கள் எனவும் தலங்கம பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேரம் திடீர் மாற்றமா?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
