இலங்கையில் வீடுகளிலேயே உயிரிழந்த கோவிட் நோயாளர்கள்
இலங்கையில் 11 கோவிட் - 19 தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்கள் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்து காணப்பட்டதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
நாட்டில் கோவிட் - 19 தொற்று காரணமாக மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நேற்றிரவு உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணங்களில் நேற்றைய தினம் 5 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், ஏனைய 28 மரணங்கள் கடந்த 17ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலத்தில் நடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கை இதுவரை கோவிட் - 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1243ஆக அதிகரித்துள்ளது.
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri